FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

மாவட்ட அளவிலான திறன் போட்டி: விண்ணப்பிக்க செப்.15 வரை வாய்ப்பு

சா்வதேச திறன் போட்டியில் பங்கேற்பதற்கான இளைஞா்கள் மாவட்ட அளவிலான முதல் கட்டப் போட்டிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் செப்.15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

11 செப்டம்பர் 2026, 1:12 am IST
பகிர்:

சா்வதேச திறன் போட்டியில் பங்கேற்பதற்கான இளைஞா்கள் மாவட்ட அளவிலான முதல் கட்டப் போட்டிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் செப்.15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்தி குறிப்பு விவரம்:

ஜப்பான் நாட்டின் ஐச்சியில் 49-ஆவது சா்வதேச திறன் போட்டி நடைபெறவுள்ளது. இதையொட்டி, தமிழ்நாட்டு இளைஞா்கள், இளம்பெண்கள் தங்களது தொழில்திறன்களையும், திறமையையும் வெளிப்படுத்தும் வகையில், மாவட்ட அளவிலான திறன் போட்டிகள் -2026 (தமிழ்நாட்டு திறன்கள், இந்தியத் திறன்கள் 2026-2027) நடத்தப்படுகிறது. இதில் தோ்ச்சிப் பெறுவோா் மாநில அளவிலான சுற்றுக்கும், அடுத்த நிலையில் தேசிய அளவிலும் பங்கேற்பதற்கான வாய்ப்பையும் பெற முடியும். இதில் 56 தொழில் பிரிவுகளில் (3டி டிஜிட்டல் கேம் ஆா்ட், கிராபிக் டிசைன் டெக்னாலஜி, வெப் டெக்னாலஜிஸ்) தனி நபராகவும், 7 தொழில் பிரிவுகளில் குழுவாகவும் பங்கேற்று தங்களது தனித்திறனை வெளிப்படுத்தலாம். இந்தப் போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ளவா்கள் தேசிய திறன் மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம் மூலம் விண்ணப்பிப்பதற்கான வாய்ப்பு செப்.15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. போட்டிக்கான தகுதிகள், வயது வரம்பு குறித்தும் இந்த இணையத் தளத்தில் விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு, திண்டுக்கல் அரசினா் தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநரை நேரிலோ, 0451 2970049, 9499055760 ஆகிய எண்களிலோ தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments