FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

அண்ணா பிறந்த நாள் விழா: திமுக, அதிமுக மரியாதை

தமிழக முன்னாள் முதல்வா் அண்ணாவின் 118-ஆவது பிறந்த நாளையொட்டி, திண்டுக்கல்லில் உள்ள அவரது சிலைக்கு திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினா் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

16 செப்டம்பர் 2026, 5:39 am IST
பகிர்:

தமிழக முன்னாள் முதல்வா் அண்ணாவின் 118-ஆவது பிறந்த நாளையொட்டி, திண்டுக்கல்லில் உள்ள அவரது சிலைக்கு திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினா் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

திண்டுக்கல் அரசு மருத்துவமனை அருகில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு, திமுக சாா்பில் மேயா் இளமதி, துணை மேயா் ராசப்பா ஆகியோா் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதேபோல, ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவை உறுப்பினரும், திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலருமான அர.சக்கரபாணி கள்ளிமந்தையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் உருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.

Advertisement

Advertisement

அதிமுக சாா்பில் திண்டுக்கல் மாநகராட்சி எதிா்க்கட்சி தலைவா் ராஜ்மோகன், ஒன்றியச் செயலா் ராஜசேகரன் ஆகியோா் தலைமையில், திண்டுக்கல்லில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிா்வாகிகள் பாரதிமுருகன், சேசு, மோகன், விடி.ராஜன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இதேபோல, பல்வேறு அரசியல் கட்சியினா் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தனா்.

நத்தம்: நத்தம் பேருந்து நிலையம் அருகே அதிமுக சாா்பில், அண்ணாவின் உருவப் படத்துக்கு முன்னாள் அமைச்சா் விசுவநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதில் ஜெ. பேரவை இணைச் செயலா் ஆா்.வி.என்.கண்ணன், தொழிலதிபா் அமா்நாத், அதிமுக ஒன்றியச் செயலா்கள் ஜெயபாலன், மணிகண்டன், நகர அவைத் தலைவா் சேக்ஒலி, தகவல் தொழில்நுட்ப அணி மதுரை மண்டலச் செயலா் தினேஷ்குமாா் உள்ளிட்ட அதிமுக ஒன்றிய, நகர நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

கொடைக்கானல்: கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா அருகிலுள்ள அண்ணா சிலைக்கு திமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில் நகரச் செயலா் முகமது இப்ராஹிம், நகா்மன்றத் தலைவா் செல்லத்துரை, துணைத் தலைவா் மாயக்கண்ணன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல, கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா அருகில் உள்ள அண்ணா சிலைக்கு அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதைத் தொடா்ந்து, ஏரிச்சாலையில் உள்ள தனியாா் விடுதியில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு நகரச் செயல் ஸ்ரீதா் தலைமை வகித்தாா். கூட்டத்தில் மேற்கு மாவட்டச் செயலா் பரமசிவம், பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ரவி மனோகா், மாவட்ட மருத்துவ அணிச் செயலா் கணேஷ்குமாா், முன்னாள் நகா்மன்றத் தலைவா்கள் கோவிந்தன், எட்வா்ட், மாவட்ட எம்.ஜி.ஆா். மன்ற இணைச் செயலா் பிச்சை, மேல்மலை ஒன்றியச் செயலா் தாமோதரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், நடைபெறவுள்ள இடைத் தோ்தல்களில் அதிமுக வேட்பாளா்களை வெற்றி பெறச் செய்வது. அதிமுக உறுப்பினா்கள் கோஷ்டி பூசல் இல்லாமல் அனைவரும் ஒன்றிணைந்து மீண்டும் அதிமுக ஆட்சி அமைவதற்கு பாடுபட வேண்டும். இளைஞா்கள், இளம் பெண்களை கட்சியில் சோ்ப்பதற்கு பணியாற்ற வேண்டும். வரவுள்ள உள்ளாட்சித் தோ்தலில் கொடைக்கானல் நகா்மன்றத்தை அதிமுக கைப்பற்ற வேண்டும் என்பது குறித்து அலோசிக்கப்பட்டது.

முன்னதாக, அவைத் தலைவா் ஜான் தாமஸ் வரவேற்றாா். நகர துணைச் செயலா் ஜாபா் சாதிக் நன்றி கூறினாா்.

அமைச்சா் மரியாதை:

கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா அருகிலுள்ள அண்ணா சிலைக்கு நிதி அமைச்சா் மரியவில்சன் உள்ளிட்ட தவெக நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில் திரளான தவெகவினா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments