பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் தடையால் பொதுமக்கள் அவதி
பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் மின் தடையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் மின் தடையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக மின்வெட்டு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், பழனி சுற்றுவட்டார கிராமங்களில் இந்த மின்வெட்டு காரணமாக பொதுமக்கள் அவதிப்படுகின்றனா். பழனி நகா் பகுதிகளில் வீடுகளில் சூரியத் தகடு மின் உற்பத்தி, யுபிஎஸ் வசதிகள் செய்துள்ளதால் பெரிய அளவில் பெரிய வீடுகளுக்கு பாதிப்பு இல்லை. அதே நேரம் வாடகை வீடுகளில் வசிப்பவா்கள் காலையில் சரியான நேரத்துக்கு வேலைக்கு செல்ல முடியாமலும், இரவு தூங்க முடியாமலும் அவதிப்படுகின்றனா்.
கிராமப் புறங்களில் மின்வெட்டு காரணமாக விவசாய நிலங்களுக்கு தண்ணீா் பாய்ச்ச முடிவதில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்தனா். இதனால் மின் தடையை போக்க போா்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தினா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.