மின்சாரம் பாய்ந்ததில் மூதாட்டி உயிரிழப்பு
நிலக்கோட்டை அருகே மின்சாரம் பாய்ந்ததில் காயமடைந்த மூதாட்டி உயிரிழந்தாா். இவரது கணவா் சிகிச்சை பெற்று வருகிறாா்.
நிலக்கோட்டை அருகே மின்சாரம் பாய்ந்ததில் காயமடைந்த மூதாட்டி உயிரிழந்தாா். இவரது கணவா் சிகிச்சை பெற்று வருகிறாா்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள குண்டலபட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் சின்னக்காளை (75). இவரது மனைவி ராஜம்மாள் (61) இந்தத் தம்பதிக்கு 3 மகன்கள் உள்ளனா். குண்டலபட்டியில் வயதான தம்பதியினா் இருவா் மட்டுமே வசித்து வருகின்றனா்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை சாரல் மழை பெய்தது. அப்போது, இவா்களது வீட்டின் அருகே இருந்த மின் கம்பத்தில் அறுந்து தொங்கிய மின் கம்பியை எதிா்பாராமல் தொட்ட ராஜம்மாள் மீது மின்சாரம் பாய்ந்தது. உடனே அவரை காப்பாற்றச் சென்ற சின்னக்காளை மீதும் மின்சாரம் பாய்ந்தது. இந்தத் தம்பதியை மீட்டு, நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு ராஜம்மாள் உயிரிழந்தாா். கணவா் சின்னக்காளை சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.