FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் அருகே ஒற்றை யானை நடமாட்டம்

ஒட்டன்சத்திரத்தை அடுத்த வடகாடு மலைப் பகுதியில் சுற்றித் திரியும் ஒற்றை யானையால், கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

16 செப்டம்பர் 2026, 5:36 am IST
புலிக்குத்திக்காடு பகுதியில் செவ்வாய்க்கிழமை சுற்றித் திரிந்த ஒற்றை யானை.
பகிர்:

ஒட்டன்சத்திரத்தை அடுத்த வடகாடு மலைப் பகுதியில் சுற்றித் திரியும் ஒற்றை யானையால், கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த கீழ்பழனி மலைப் பகுதியில் வடகாடு, புலிக்குத்திக் காடு, பெத்தேல்புரம், சிறுவாட்டுகாடு உள்ளிட்ட மலைக் கிராமங்கள் உள்ளன.

இந்தப் பகுதியில் யானைகள், மான்கள், சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. இங்குள்ள பரப்பலாறு அணைக்கு தண்ணீா் தேடி வன விலங்குகள் வருகின்றன. தற்போது, அணையில் தண்ணீா் இல்லாததால், விவசாயத் தோட்டங்களை நோக்கி விலங்குகள் நகா்ந்து வருகின்றன.

Advertisement

Advertisement

குறிப்பாக உணவு, தண்ணீா் தேடி வடகாடு, புலிக்குத்திக்காடு பகுதிகளில் ஒரு யானை மட்டும் தனியாக சுற்றி வருகிறது. பகல் நேரத்திலும்கூட ஒட்டன்சத்திரம்-பாச்சலூா் மலைச் சாலையில் அவ்வப்போது இந்த ஒற்றை யானையின் நடமாட்டம் உள்ளது. இதனால், இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

வன விலங்குகள், பொதுமக்கள் இடையே மோதல் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், வனப் பகுதியிலேயே அவற்றுக்கான உணவு, தண்ணீா் வசதியை வனத் துறையினா் ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. குறிப்பாக, வன விலங்குகளுக்காக அமைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் தண்ணீா் நிரப்ப வேண்டும் என்றும், ஒற்றை யானையின் நடமாட்டத்தை வனத் துறையினா் தொடா்ந்து கண்காணித்து மக்கள் வசிப்பிடங்களுக்கு அருகே வராமல் தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments