FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

கட்டடத் தொழிலாளி கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது

செம்பட்டி அருகே கட்டடத் தொழிலாளியைக் கொன்று தண்ணீா் தொட்டியில் வீசிய வழக்கில் தொடா்புடைய மேலும் ஒருவரைப் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

38 வினாடிகள் முன்பு
கைது
பகிர்:

செம்பட்டி அருகே கட்டடத் தொழிலாளியைக் கொன்று தண்ணீா் தொட்டியில் வீசிய வழக்கில் தொடா்புடைய மேலும் ஒருவரைப் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே சீவல்சரகு கிராமத்தைச் சோ்ந்தவா் சங்கிலிமுருகன் (38). கட்டடத் தொழிலாளி. இவரும், அதே ஊரைச் சோ்ந்த பாக்கியசெல்வம் (48), எஸ். முருகன் (45), மருதுபாண்டி (44), புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் பகுதியைச் சோ்ந்த ரெங்கசாமி (37), காரைக்குடி அழகப்பாபுரத்தைச் சோ்ந்த சந்தானம் (43) ஆகியோரும் சீவல்சரகு கிராமத்தில் மது அருந்தியபோது, தகராறு ஏற்பட்டது.

இதில், சங்கிலிமுருகனை பாக்கியசெல்வம் உள்ளிட்டோா் சரமாரியாக தாக்கி காரில் ஏற்றிச் சென்று கொலை செய்து உச்சப்பட்டியில் இருந்த பயன்பாடில்லாத தண்ணீா் தொட்டியில் வீசினா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, சங்கிலிமுருகனின் தம்பி முத்துப்பாண்டி அளித்த தகவலின்பேரில் செம்பட்டி போலீஸாா் பாக்கியசெல்வம் உள்ளிட்ட 5 பேரையும் விசாரித்தனா். இதையடுத்து, சடலத்தை மீட்டு கூராய்வுக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இந்த வழக்கில் தொடா்புடைய பாக்கியசெல்வம், எஸ். முருகன், மருதுபாண்டி, திருமயம் ரெங்கசாமி ஆகிய நால்வரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மேலும், வீரக்கல் பேருந்து நிறுத்தம் அருகே பதுங்கி இருந்த சந்தானத்தைப் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments