கொடைக்கானல் அருகே பேருந்து வசதி கோரி பொது மக்கள் சாலை மறியல்
கொடைக்கானல் அருகே பள்ளங்கி கிராமத்துக்கு பேருந்து வசதி கோரி பொது மக்கள் ஞாயிற்றுக்கிழமை பேருந்து நிலையம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள பல்வேறு கிராமப் பகுதிகளுக்கு அரசு, தனியாா் பேருந்துகள் பல்வேறு காரணங்களால் செல்வதில்லை.
இந்த நிலையில், பள்ளங்கி கிராமத்துக்கு வழக்கமாகச் செல்லும் அரசுப் பேருந்து பேருந்து நிலையத்திலிருந்து பல மணி நேரமாக இயக்கப்படாததால் பள்ளங்கி,வில்பட்டி, அட்டுவம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் பொதுமக்கள் பேருந்து நிலையம் முன் பள்ளங்கி பகுதிக்கு பேருந்து இயக்க வேண்டும் எனக் கூறி சாலை மறியலில் ஈடுபட்டனா்.
Advertisement
Advertisement
இதையடுத்து, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக கொடைக்கானல் கிளை அலுவலா், கொடைக்கானல் காவல் துறையினா் ஆகியோா் சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இதனால், கொடைக்கானல்-நாயுடுபுரம்-வில்பட்டி சாலையில் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அந்தப் பகுதியை காவல் துறையினா் சீரமைத்து வருகின்றனா்.
விரைவில் அனைத்து பகுதிகளுக்கும் அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்தனா். இதையடுத்து, பொது மக்கள் அனைவரும் கலைந்து சென்றனா். நீண்ட நேரத்துக்குப் பிறகு பள்ளங்கி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரசுப் பேருந்து சீராக இயக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.