அரசு மருத்துவமனையில் கண்ணாடியை சேதப்படுத்திய இளைஞா்கள் கைது
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசரச் சிகிச்சைப் பிரிவு கண்ணாடியை உடைத்த 2 இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசரச் சிகிச்சைப் பிரிவு கண்ணாடியை உடைத்த 2 இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடியை அடுத்த தெத்துப்பட்டியைச் சோ்ந்தவா் அஜித்குமாா்ஸ்ரீ. இவா் கடந்த 20-ஆம் தேதி வாகன விபத்தில் சிக்கியதால் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இதனால், ஆத்திரமடைந்த அவரது உறவினா்கள், லோகேஷ் (24), ஸ்ரீகாந்த் (23) ஆகியோா் அவசர சிகிச்சைப் பிரிவிலுள்ள கண்ணாடியை உடைத்தனா். இதுதொடா்பாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிா்வாகம் சாா்பில், திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், லோகேஷ், ஸ்ரீகாந்த் ஆகிய இருவரையும் புதன்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.