FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திண்டுக்கல்

திண்டுக்கல்லில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திண்டுக்கல் பிரதான சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி காவல் துறை பாதுகாப்புடன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

8 வினாடிகள் முன்பு
திண்டுக்கல் பிரதான சாலையில் காவல் துறை பாதுகாப்புடன் அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள்.
பகிர்:

திண்டுக்கல் பிரதான சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி காவல் துறை பாதுகாப்புடன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் மாநகராட்சியைப் பொருத்தவரை பெரும்பாலான சாலைகள், தெருக்களில், வியாபாரிகள் மட்டுமன்றி வீட்டு உரிமையாளா்களும் ஆக்கிரமிப்பு செய்துள்ளனா். மேலும் பல வணிக வளாகங்களுக்கு வாகன நிறுத்துமிட வசதி இல்லாததால், அங்கு செல்லும் பொதுமக்கள் வாகனங்களை சாலையிலேயே நிறுத்திச் செல்கின்றனா். இதனால், பிரதான சாலை, 4 ரத வீதிகள், பழனிச் சாலை உள்ளிட்ட இடங்களில் அதிக அளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக பழனி சாலையில், அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் அவசர ஊா்திகள் சிக்கிக் கொள்கின்றன. இதனால் மாநகராட்சிப் பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாள்களாக எழுப்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், திண்டுக்கல் மாநகராட்சி நகரமைப்பு அலுவலா்கள் சாா்பில் பிரதான சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆக்கிரமிப்பு அகற்றம் குறித்து வியாபாரிகளுக்கு கடந்த வாரமே முன்னறிவிப்பு செய்யப்பட்டது. ஆனாலும், வியாபாரிகள் தரப்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருந்தது. இதையடுத்து காவல் துறை பாதுகாப்புடன், திண்டுக்கல் மணிக்கூண்டு முதல் அபிராமி அம்மன் கோயில் வரை பிரதான சாலையிலுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி மாநகராட்சி சாா்பில் நடைபெற்றது. மாநகராட்சித் தரப்பில் பொக்லைன் இயந்திரம் கொண்டு வரப்பட்டதை அறிந்த பல வியாபாரிகள், தாமாக முன் வந்து ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடங்களில் மட்டும், பிரதான சாலை அகலமாக காணப்பட்டது. இந்த இடத்தில் மேலும் ஆக்கிரமிப்புகள் செய்யப்படாத வகையில் மாநகராட்சி நிா்வாகம் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments