FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்களின் உண்டியல்  வருவாய் ரூ.72.91 லட்சம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் மற்றும் அதன் உபகோயில்களின் உண்டியல்களில் பக்தர்கள் ஜூலை மாதம் ரூ.72.91 லட்சம் ரொக்கமாக காணிக்கை செலுத்தியுள்ளனர்.

30 ஜனவரி 2024, 10:07 pm IST
பகிர்:

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் மற்றும் அதன் உபகோயில்களின் உண்டியல்களில் பக்தர்கள் ஜூலை மாதம் ரூ.72.91 லட்சம் ரொக்கமாக காணிக்கை செலுத்தியுள்ளனர்.
மாதந்தோறும் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் மற்றும் அதன் உபகோயில்களான தெப்பக்குளம் மாரியம்மன், முக்தீஸ்வரர், செல்லூர் திருவாப்புடையார், திருவாதவூர் திருமறைநாதர் உள்ளிட்டவற்றின் உண்டியல்கள் எண்ணப்பட்டு வருகின்றன. ஜூலை மாதத்துக்கான உண்டியல்கள் எண்ணிக்கை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது. 
இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் மு.ராமசாமி முன்னிலையில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் மீனாட்சிசுந்தரேசுவரர் கோயில் தக்கார் பிரதிநிதி, கண்காணிப்பாளர்கள், பக்தர் பேரவையினர், ஐயப்ப சேவா சங்கத்தினர், கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் கோயில் பணியாளர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.
உண்டியல்களில் ரொக்கமாக ரூ.72லட்சத்து 91 ஆயிரத்து 162 பக்தர்களால் செலுத்தப்பட்டிருந்தது. தாலி உள்ளிட்ட தங்கப் பொருள்களாக 439 கிராமும், பல மாற்று வெள்ளி பொருள்களாக 811 கிராமும், பிரதமரைத் தகடுகளாக 1680 கிராமும் காணிக்கையாகச் செலுத்தப்பட்டிருந்தன. மேலும், பலமாற்றுப் பித்தளையாக 1,340 கிராமும் செலுத்தப்பட்டிருந்தது. உள்நாட்டு பக்தர்கள் மட்டுமல்லாது மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, கனடா, இலங்கை போன்ற வெளிநாட்டு பக்தர்களும் உண்டியல்களில் தமது நாட்டு பணத்தை காணிக்கையாகச் செலுத்தியிருந்தனர். அதன்படி வெளிநாட்டு தாள்கள் 508  உண்டியல்களில்இருந்தன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments