FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மேலூர் ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம்

மேலூர் கொன்னைமஸ்தான் அவுலியா தர்கா அருகிலுள்ள ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

மேலூர் கொன்னைமஸ்தான் அவுலியா தர்கா அருகிலுள்ள ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோயில் நிர்வாகத்துக்கு உள்பட்ட இக்கோயில் திருப்பணி கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. கோயிலில் சிதிலமடைந்த பகுதிகள் புதுப்பிக்கப்பட்டு, தரைத்தளம் கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.
 இந்நிலையில் கும்பாபிஷேகத்தையொட்டி யாக சாலை பூஜைகள் கள்ளழகர் கோயில் பட்டர் அம்பி தலைமையில் நடைபெற்றது. புதன்கிழமை காலை 10 மணியளவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. மேலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பெரியபுள்ளான் (எ) செல்வம் மற்றும் கோயில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments