ரயிலில் அடிபட்டு இறந்தவரின் சடலத்தை பெற வந்த மனைவியும் விபத்தில் சாவு
மதுரை அருகே ரயிலில் அடிபட்டு உயிரிழந்த வடமாநிலத்தவரின் சடலத்தைப் பெற வந்த அவரது மனைவியும் விபத்தில் உயிரிழந்தார்.
மதுரை அருகே ரயிலில் அடிபட்டு உயிரிழந்த வடமாநிலத்தவரின் சடலத்தைப் பெற வந்த அவரது மனைவியும் விபத்தில் உயிரிழந்தார்.
இதுகுறித்து மதுரை ரயில்வே போலீஸார் கூறியதாவது:
கடந்த 6 ஆம் தேதி வாடிப்பட்டி பகுதியில் ரயில் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். விசாரணையில் அவரது பெயர் முண்டா (38) என்பதும் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அதையடுத்து, முண்டாவின் சடலம், மதுரை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
முண்டாவின் சடலத்தைப் பெற ராஞ்சியிலிருந்து அவரது மனைவி, மகன் புறப்பட்ட நிலையில், அவர்களும் விபத்தில் சிக்கியுள்ளனர். அதில் முண்டாவின் மனைவி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. மகன் பலத்த காயமடைந்து சிகிச்சையில் உள்ளார். இதனால், முண்டாவின் சடலத்தை தொடர்ந்து பாதுகாக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதையடுத்து தூத்துக்குடியைச் சேர்ந்த பாலசுப்பிரமணி என்பவரிடம் முண்டாவின் சடலம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது என்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.