வைகை அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
வைகை அணையிலிருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
மதுரை: வைகை அணையிலிருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் அணையிலிருந்து தண்ணீர் திறந்தனர். அணையிலிருந்து இன்று முதல் நாளொன்றுக்கு 900 கன அடி வீதம் 45 நாள்களுக்கு முழுமையாகவும், 75 நாள்களுக்கு முறை வைத்தும் மொத்தம் 120 நாள்கள் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது.
வைகை அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் மதுரை மாவட்டம் வடக்கு வட்டத்தில் 26 ஆயிரத்து 732 ஏக்கர், வாடிப்பட்டி வட்டத்தில் 26,792 ஏக்கர், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டத்தில் 1,787 ஏக்கர் என மொத்தம் 45 ஆயிரத்து 41 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.