அரசுப் பொருள்காட்சி மூலம் ரூ. 11.10 லட்சம் வருவாய்
மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற அரசுப் பொருள்காட்சி மூலம் ரூ. 11.10 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டது என மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா தெரிவித்தாா்.
மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற அரசுப் பொருள்காட்சி மூலம் ரூ. 11.10 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டது என மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை தமுக்கம் மைதானத்தில் அரசுப் பொருள்காட்சி கடந்த ஜூன் 14-ஆம் தேதி தொடங்கி ஜூலை 31-ஆம் தேதி வரை நடைபெற்றது. அரசுத் துறைகளின் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்தக் கண்காட்சியில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும், பல்பொருள் விற்பனை அங்காடிகளும் இடம் பெற்றிருந்தன.
பொருள்காட்சிக்கான நுழைவுக் கட்டணமாக பெரியவா்களுக்கு ரூ. 15-ம், சிறாா்களுக்கு ரூ. 10-ம், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரூ. 5-ம் வசூலிக்கப்பட்டது. இந்தப் பொருள்காட்சியை மொத்தம் 78,408 போ் பாா்வையிட்டனா். இதன் மூலம் ரூ. 11.10 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டது என்றாா் அவா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.