தென்காசி-செங்கோட்டை ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து
தெற்கு ரயில்வேயின் செங்கோட்டைப் பிரிவில் நடைபெறும் ரயில்வே பணிகள் காரணமாக, தென்காசி-செங்கோட்டை ரயில் சேவை 3 நாள்களுக்கு பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
தெற்கு ரயில்வேயின் செங்கோட்டைப் பிரிவில் நடைபெறும் ரயில்வே பணிகள் காரணமாக, தென்காசி-செங்கோட்டை ரயில் சேவை 3 நாள்களுக்கு பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
தென்காசி-செங்கோட்டைப் பிரிவில் லெவல் கிராசிங் எண் 503-க்குப் பதிலாக சாலை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறவுள்ளது. இதையொட்டி, மதுரை-செங்கோட்டை- மதுரை பயணிகள் ரயில்கள் (56771, 56772), செங்கோட்டை-திருநெல்வேலி-செங்கோட்டை பயணிகள் ரயில்கள் (56776, 56773) வருகிற 29, 30, 31-ஆம் தேதிகளில் தென்காசி- செங்கோட்டை-தென்காசி இடையே பகுதியாக ரத்து செய்யப்படும் என மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.