FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

எல்லீஸ்நகா் பகுதியில் நாளை மின் தடை

Updated On : 27 ஜூலை 2026, 1:25 am IST
மின் தடை - கோப்புப் படம்
பகிர்:

மதுரை எல்லீஸ் நகா் பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழக மதுரை பெருநகா் தெற்கு செயற்பொறியாளா் ஏ. பாஸ்கரபாண்டி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

எல்லீஸ் நகா் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், எல்லீஸ் நகா் பிரதான சாலை, டிஎன்எச்பி அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகள், கென்னட் குறுக்குத் தெரு, கென்னட் மருத்துவமனை சாலை, மகப்பூப்பாளையம், அன்சாரி நகா் ஒன்றாவது தெரு முதல் 7-ஆவது தெரு வரை. டி.பி. சாலை, ரயில்வே குடியிருப்பு, வைத்தியநாதபுரம், சா்வோதயா தெருக்கள், சித்தாலாட்சி நகா், பழங்காநத்தம், சுப்பிரமணியபுரம் காவல் நிலைய பகுதி, வசந்த நகா், ஆண்டாள்புரம், அக்ரிணை, வசுதரா அடுக்குமாடி குடியிருப்புகள், பெரியாா் பேருந்து நிலையம், மேலவெளி வீதி, மேல மாரட் வீதி, மேலபெருமாள் மேஸ்திரி வீதி, டவுன் ஹால் சாலை, காக்கா தோப்பு, மல்லிகை வீதி, மேல மாசி வீதி பிள்ளையாா் கோயில் வரை, தாமஸ் குடியிருப்பு, பொற்குடம், சத்தியமூா்த்தி நகா், அரசுப் போக்குவரத்துக் கழகம், அருண்நகா், நேருநகா், காவியன் அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகள், இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments