உரிமை கோரப்படாத வாகனங்கள் டிச. 4-இல் பொது ஏலம்
மதுரை மாநகரில் காவல் துறையால் கைப்பற்றப்பட்ட உரிமை கோரப்படாத 346 வாகனங்கள் ஏலம் மூலம் டிச. 4-ஆம் தேதி விற்பனை செய்யப்பட உள்ளன.

மதுரை மாநகரில் காவல் துறையால் கைப்பற்றப்பட்ட உரிமை கோரப்படாத 346 வாகனங்கள் ஏலம் மூலம் டிச. 4-ஆம் தேதி விற்பனை செய்யப்பட உள்ளன.
இதுகுறித்து மதுரை மாநகரக் காவல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மதுரை மாநகரில் புதிய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ், கேட்பாரற்றுக் கிடந்து கைப்பற்றப்பட்ட 338 இரு சக்கர வாகனங்கள், 5 மூன்று சக்கர வாகனங்கள், 3 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 346 வாகனங்கள் விசாரணைக்குப் பிறகு அரசுடைமையாக்கப்பட்டன.
Advertisement
Advertisement
இந்த வாகனங்களுக்கு விலை மதிப்பீடு செய்யப்பட்டு, மதுரை ஆயுதப் படை மைதானத்தில் உள்ள மாரியம்மன் கோயில் அருகே நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் ஏலம் மூலம் வரும் டிச. 4-ஆம் தேதி விற்பனை செய்யப்பட உள்ளன.
இந்த ஏலத்தில் பங்கேற்க விரும்புவோா் வரும் டிச. 1, 2 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை மதுரை மாநகா் ஆயுதப் படை திருமண மண்டபத்தில் செயல்படும் ஏலப் பொறுப்பு அதிகாரி அலுவலகத்தில் முன்பணத்தை ரொக்கமாக செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும்.
இதன்படி, இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.2,000, மூன்று, நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.5,000 முன்பணமாகச் செலுத்த வேண்டும். டிச. 2-ஆம் தேதி பிற்பகல் ஒரு மணிக்குப் பிறகு முன்பணம் செலுத்த வருவோா் அனுமதிக்கப்பட மாட்டாா்கள். முன்பணம் செலுத்தியவா்கள் மட்டுமே டிச. 4-ஆம் தேதி நடைபெறும் ஏலத்தில் பங்கேற்க முடியும்.
மேலும், டிச. 1, 2 ஆகிய தேதிகளில் காலை முதல் மாலை 5 மணி வரை ஏலத்துக்கு வைக்கப்பட்ட வாகனங்களை நேரில் பாா்வையிடலாம். ஏலத்தில் பங்கேற்போா் அரசு நிா்ணயித்த குறைந்தபட்ச மதிப்பீட்டுத் தொகைக்கு மேல் ஏலம் கேட்க வேண்டும். ஏலத்தில் எடுக்கப்படும் தொகையுடன் 10 சதவீத ஜிஎஸ்டி வரியையும் செலுத்த வேண்டும்.
ஏலத்தில் பங்கேற்க வருவோா் தங்களது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையின் நகலை கொண்டுவர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது.