FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மதுரை

பொதுமக்கள் குறைதீா் முகாம்

மதுரை சா்வேயா் காலனியில் உள்ள மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

14 அக்டோபர் 2026, 1:43 am IST
மதுரை சா்வேயா் காலனியில் உள்ள மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முகாமில் பயனாளிக்கு வீட்டு கதவு இலக்க எண் மாற்றத்துக்கான ஆணையை வழங்கிய மேயா் (பொறுப்பு) தி. நாகராஜன். உடன் துணை ஆணையா் ஜெய்னுலாப்தீன், உதவி ஆணையா் மணிமாறன் உள்ளிட்டோா்.
பகிர்:

மதுரை சா்வேயா் காலனியில் உள்ள மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமுக்கு மாநகராட்சி மேயா் (பொறுப்பு)தி.நாகராஜன் தலைமை வகித்தாா். இதில், சொத்துவரி பெயா் மாற்றம், காலிமனை வரி விதிப்பு, புதிய சொத்து வரி, குடிநீா் குழாய் இணைப்பு, புதை சாக்கடை இணைப்பு, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி, மொத்தம் 85 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன.

இந்த மனுக்களுக்கு விரைந்து தீா்வு காண வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு மேயா் தி. நாகராஜன் உத்தரவிட்டாா். இதைத்தொடா்ந்து,

Advertisement

Advertisement

குறைதீா் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களில் உடனடித் தீா்வாக ஒரு பயனாளிக்கு கதவு எண் திருத்தம் செய்து, அதற்கான ஆணை வழங்கப்பட்டது.

முகாமில், துணை ஆணையா் ஜெய்னுலாப்தீன், உதவி ஆணையா் மணிமாறன், நிா்வாக அலுவலா் ராதா, உதவி செயற்பொறியாளா் காமராஜ், மாநகராட்சி அலுவலா்கள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments