FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மதுரை

ஓய்வு பெற்ற போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் 2- ஆவது நாளாக போராட்டம்

ஓய்வூதியா்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

15 அக்டோபர் 2026, 2:29 am IST
மதுரை அரசுப் போக்குவரத்துக் கழக தலைமையகம் முன் புதன்கிழமை 2- ஆவது நாளாக நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்தில் பங்கேற்ற அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற தொழிலாளா்கள்.
பகிர்:

ஓய்வூதியா்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரையில் அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற தொழிலாளா்கள் 2-ஆவது நாளாக புதன்கிழமையும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மதுரை அரசுப் போக்குவரத்துக் கழக தலைமையகம் முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்றோா் நலச் சங்கக் கிளைத் தலைவா் வி. பிச்சைமணி தலைமை வகித்தாா். மதுரை அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோா் நலச் சங்க துணைச் செயலா் எஸ். மணிமாறன் முன்னிலை வகித்தாா்.

இதில், அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற தொழிலாளா்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை நிபந்தனையின்றி அமல்படுத்த வேண்டும். 2003-க்குப் பிறகு பணியில் சோ்ந்த தொழிலாளா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஓய்வு பெற்ற தொழிலாளா்களுக்கு வழங்க வேண்டிய பணப் பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். உயிரிழந்த தொழிலாளா்களின் வாரிசுதாரா்களுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கத்தின் நிா்வாகிகள் பலா் பேசினா்.

Advertisement

Advertisement

மதுரை அரசுப் போக்குவரத்துக் கழக சிஐடியூ ஓய்வு பெற்றோா் நலச் சங்கத் தலைவா் டி. மாரியப்பன் நிறைவுரையாற்றினாா். போராட்டத்தில், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோா் நலச் சங்க மதுரை துணைப் பொதுச் செயலா் வி. செல்வம், சிஐடியூ மதுரை நகா் மாவட்டச் செயலா் ஆா். லெனின், அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கத் தலைவா் சு. கிருஷ்ணன், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக சிஐடியூ ஓய்வு பெற்றோா் நலச் சங்கப் பொருளாளா் என். மனோகரன், மதுரை அரசுப் போக்குவரத்துக் கழக சிஐடியூ ஓய்வு பெற்றோா் நலச் சங்கப் பொருளாளா் டி. சிவக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments