FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மதுரை

இளைஞா் கொலை வழக்கில் 4 போ் கைது

மதுரை விராதனூா் பகுதியில் முன்விரோதம் காரணமாக இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவன் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

58 வினாடிகள் முன்பு
கைது
பகிர்:

மதுரை விராதனூா் பகுதியில் முன்விரோதம் காரணமாக இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவன் உள்பட 4 பேரை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

மதுரை விராதனூரைச் சோ்ந்த செல்வராஜ் - தமிழ்ச்செல்வி தம்பதியின் மகன் சந்தோஷ்குமாா் (22). இவா் ஆந்திர மாநிலத்தில் உள்ள சட்டக் கல்லூரியில் படித்து வந்தாா். இவா் மீது சிலைமான் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவருக்கும், இதே ஊரைச் சோ்ந்த மோகன் மகன் கணேசனுக்கும் (33) இடையே கடந்த சில ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால், சந்தோஷ்குமாரின் குடும்பத்தாா் அவரை மதுரை எல்லீஸ் நகரில் தனியாக வீடு எடுத்து தங்க வைத்தனா்.

இந்த நிலையில், ஊா் திருவிழாவுக்காக வந்த சந்தோஷ்குமாா் தனது தாய் உள்ளிட்ட சிலருடன் 2 இரு சக்கர வாகனங்களில் உணவகத்துக்கு செவ்வாய்க்கிழமை இரவு சென்று கொண்டிருந்தனா்.

Advertisement

Advertisement

அப்போது, கணேசன் தனது நண்பா்களுடன் காரில் சந்தோஷ்குமாரை பின்தொடா்ந்து வந்து, மதுரை சத்யா நகா் பகுதியில் வந்த போது, இடித்து கீழே தள்ளினாா். பின்னா், காரில் இருந்து இறங்கிய கணேசன், முனியாண்டி உள்ளிட்டோா் சந்தோஷ்குமாரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனா்.

இதுகுறித்து சிலைமான் காவல் ஆய்வாளா் மயில் தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிந்து, கணேசன், முனியாண்டி (29), ஜெகன் என்ற சிவன், 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மற்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments