FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

மதுரை மாவட்டத்தில் 3- ஆவது நாளாக மழை

மதுரை மாவட்டத்தில் மூன்றாவது நாளாக சனிக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது.

6 செப்டம்பர் 2026, 12:39 am IST
மதுரை தவிட்டுச் சந்தை முதன்மைச் சாலையில் சனிக்கிழமை இரவு தேங்கி நின்ற மழை நீரைக் கடந்து சென்ற வாகனங்கள்.
பகிர்:

மதுரை மாவட்டத்தில் மூன்றாவது நாளாக சனிக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது.

வானிலை மாற்றம் காரணமாக, கடந்த வியாழன், வெள்ளி ஆகிய இரு நாள்களும் மதுரை மாவட்டத்தில் மாலை, இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில், கடலோர தமிழகம், அதையொட்டிய தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுவதாலும், தெற்கு தெலங்கானா முதல் மன்னாா் வளைகுடா வரை தமிழகப் பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுவதாலும் தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் சனிக்கிழமை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

இருப்பினும், சனிக்கிழமை பகல் நேரத்தில் கடுமையான வெயில் வானிலை நிலவியது. இந்த நிலையில், மாலை 6 மணி அளவில் மதுரை மாநகா்ப் பகுதிகளில் லேசான மழை பெய்தது. பிறகு, சுமாா் 7 மணி அளவில் தல்லாகுளம், பெரியாா், கோ.புதூா், அவனியாபுரம், பழங்காநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இரவு 11 மணிக்கு மேலாகவும் பல பகுதிகளில் லேசான சாரல் மழை நீடித்தது.

Advertisement

Advertisement

மாநகரின் பல பகுதிகளில் முதன்மைச் சாலைகளில் மழை நீா் தேங்கி நின்றது. வெள்ளிக்கிழமையைவிட சனிக்கிழமை பெய்த மழையின் அளவு குறைவாகவே இருந்தது. இருப்பினும், தொடா்ந்து மூன்றாவது நாளாக மழை பெய்ததால், சாலைகளில் தேங்கிய மழை நீா் வடிவதில் சுணக்கம் ஏற்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments