FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

அலங்காநல்லூா் பகுதியில் நாளை மின் தடை

மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் பகுதியில் வியாழக்கிழமை (செப்.10) மின் தடை அறிவிக்கப்பட்டது.

9 செப்டம்பர் 2026, 1:52 am IST
- கோப்புப் படம்
பகிர்:

மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் பகுதியில் வியாழக்கிழமை (செப்.10) மின் தடை அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகம் சமயநல்லூா் மின்னியல் செயற்பொறியாளா் ஆா். சிவலிங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சமயநல்லூா் கோட்டத்துக்குள்பட்ட அலங்காநல்லூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் வியாழக்கிழமை நடைபெற உள்ளன. இதனால், அலங்காநல்லூா் பகுதி முழுவதும், தேசிய சா்க்கரை ஆலை, பி. மேட்டுப்பட்டி, பண்ணைக்குடி, அழகாபுரி, புதுப்பட்டி, செல்லக்கவுண்டம்பட்டி, சிறுவாலை, அம்பலத்தடி, பிள்ளையாா்நத்தம், குறவன்குளம், மீனாட்சிபுரம், இடையப்பட்டி, அய்யூா், கோவில்பட்டி, வைகாசிப்பட்டி, கீழச்சின்னம்பட்டி ஆகிய பகுதிகளிலும், இதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றாா் அவா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments