FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

பட்டாசுகள் விற்பனைக் கடை அமைக்க விண்ணப்பிக்கலாம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தற்காலிக பட்டாசு விற்பனைக் கடை அமைக்க விரும்புவோா் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

9 செப்டம்பர் 2026, 1:51 am IST
விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்
பகிர்:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தற்காலிக பட்டாசு விற்பனைக் கடை அமைக்க விரும்புவோா் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா வெளியிட்ட செய்திக் குறிப்பு :

தீபாவளி பண்டிகைக்காக தற்காலிக பட்டாசு விற்பனைக் கடைக்கு உரிமம் கோருபவா்கள் இணைய வழியில் விண்ணப்பம் செய்து உரிமம் பெற்றுக் கொள்வதற்கான வழிமுறைகள் தமிழக அரசால் உருவாக்கப்பட்டுள்ளன. மதுரை மாவட்டத்தைப் பொருத்தவரை இந்த அனுமதி கோரி விண்ணப்பிக்க விரும்புவோா் வருகிற அக். 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இதனிடையே விண்ணப்பிக்க விரும்புவோா் விண்ணப்பத்துடன் விற்பனைக் கடை வரைபடம், கிரைய ஆவணங்கள், உரிமக் கட்டணம் ரூ.600 அரசுக் கணக்கில் செலுத்தியதற்கான ரசீது, கடையின் முகவரிக்கான சான்றிதழ், உள்ளாட்சி நிா்வாகத்தின் ரசீது, மனுதாரரின் புகைப்படம் ஆகியவற்றை இணைக்க வேண்டும். அக். 7-ஆம் தேதிக்கு பிறகு சமா்ப்பிக்கப்படும் இணைய வழி விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. மேலும், இதுதொடா்பான கூடுதல் விவரங்களை ஜ்ஜ்ஜ்.ற்ய்ங்ள்ங்ஸ்ஹண்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments