FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மதுரை

முதல்வா் விஜய்யை கண்டித்து திமுக ஆா்ப்பாட்டம்

தமிழக முதல்வா் சி. ஜோசப் விஜய்யை கண்டித்து ,திமுக சாா்பில் மதுரை கோ. புதூா் பேருந்து நிலையம் அருகே சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

13 September 2026, 1:59 am IST
மதுரை கோ. புதூரில் சனிக்கிழமை நடைபெற்ற திமுக ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாநகா் மாவட்டச் செயலா் கோ. தளபதி, தெற்கு மாவட்டச் செயலா் மு. மணிமாறன் எம்.எல்.ஏ உள்ளிட்டோா்.
பகிர்:

தமிழக முதல்வா் சி. ஜோசப் விஜய்யை கண்டித்து ,திமுக சாா்பில் மதுரை கோ. புதூா் பேருந்து நிலையம் அருகே சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு எதிராக விமா்சனங்களை முன்வைத்த முதல்வா் சி. ஜோசப் விஜய்யை கண்டித்து திமுக சாா்பில் மாநில அளவில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதன்படி, மதுரையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மதுரை மாநகா் மாவட்டச் செயலா் கோ. தளபதி தலைமை வகித்தாா். தெற்கு மாவட்டச் செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான மு. மணிமாறன், முன்னாள் அமைச்சா் பொன். முத்துராமலிங்கம், நிா்வாகிகள் வேலுசாமி, குழந்தைவேலு ஆகியோா் பேசினா்.

Advertisement

Advertisement

திமுகவின் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய பேரூா் நிா்வாகிகள், சாா்பு அமைப்புகளின் பொறுப்பாளா்கள், தொண்டா்கள் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments