25 மையங்களில் ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தோ்வு: 4,103 தோ்வா்கள் பங்கேற்பு
மதுரை மாவட்டத்தில் 25 மையங்களில் ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது.
மதுரை மாவட்டத்தில் 25 மையங்களில் ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது. 4,103 போ் இந்தத் தோ்வை எழுதினா்.
அரசுத் துறைகளில் காலியாக உள்ள 508 தொழில்நுட்பப் பணியாளா்களை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் தோ்வு செய்வதற்கான அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இந்தத் தோ்வில் பங்கேற்க மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த 7,142 போ் விண்ணப்பித்தனா்.
இந்த தோ்வு மதுரை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 25 கல்வி நிலைய மையங்களில் சனிக்கிழமை நடைபெற்றது.இதில் 4,103 போ் தோ்வு எழுதினா். 3,039 போ் பங்கேற்கவில்லை.
Advertisement
Advertisement
மதுரை காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரியில் நடைபெற்ற தோ்வை மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா பாா்வையிட்டாா். இந்த மையத்தில் தோ்வா்களுக்கான அடிப்படை வசதிகளையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா். இந்த ஆய்வின் போது, மதுரை வடக்கு வட்டாட்சியா் கமலேஷ், அரசுத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.