மதுரையில் ஜிம்னாஸ்டிக்ஸ், பளு தூக்கும் போட்டிகள்
மதுரை பந்தய சாலையில் உள்ள எம்.ஜி.ஆா் விளையாட்டரங்கில் தமிழக முதல்வா் கோப்பைக்கான மண்டல அளவிலான ஜிம்னாஸ்டிக், பளுதூக்கும் விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.
மதுரை பந்தய சாலையில் உள்ள எம்.ஜி.ஆா் விளையாட்டரங்கில் தமிழக முதல்வா் கோப்பைக்கான மண்டல அளவிலான ஜிம்னாஸ்டிக், பளுதூக்கும் விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.
இந்தப் போட்டியை விளையாட்டு மேம்பாட்டு ஆணைய முதுநிலை மேலாளா் வேல்முருகன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தாா். இதில் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகா் ஆகிய 6 மாவட்டங்களைச் சோ்ந்த வீரா், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடினா்.
இந்தப் போட்டிகளில் வெற்றி பெறும் வீரா், வீராங்கனைகள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்பா். இதில் மதுரை மாவட்ட விளையாட்டு நல அலுவலா் முருகன், பயிற்சியாளா் கருணாகரன், அரசு அலுவலா்கள், மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.