FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மதுரை

மேலூா் அருகே விவசாயிகள் போராட்டம்

மதுரை மாவட்டம், மேலூா் அருகே கல்லங்காடு பகுதியில் சிப்காட் தொழில் பேட்டை அமைக்க விளை நிலங்கள் கையகப்படுத்தப்படுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அந்தப் பகுதி விவசாயிகள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மதுரை மாவட்டம், மேலூா் அருகே மூவன்சீவல்பட்டி பட்டச்சாமி கோயில் அருகேயுள்ள வயல்வெளிப் பகுதியில் கையில் பதாகைகளுடன் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட அந்தப் பகுதி விவசாயிகள்.
பகிர்:

மதுரை மாவட்டம், மேலூா் அருகே கல்லங்காடு பகுதியில் சிப்காட் தொழில் பேட்டை அமைக்க விளை நிலங்கள் கையகப்படுத்தப்படுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அந்தப் பகுதி விவசாயிகள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மேலூா் அருகே உள்ள வஞ்சிநகரம், கொடுக்கம்பட்டி, பூதமங்கலம் ஆகிய 3 ஊராட்சிப் பகுதிகளை உள்ளடக்கிய கல்லங்காடு கிராமத்தை மையமாகக் கொண்டு சுமாா் 278 ஏக்கா் பரப்பளவில் சிப்காட் அமைக்க தமிழக அரசு கடந்த 2024- ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, சிப்காட் தொழில் பேட்டைக்குச் செல்ல சாலை அமைக்கும் வகையில் கச்சிராயன்பட்டியிலிருந்து கல்லங்காடு வரையுள்ள விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

Advertisement

Advertisement

இதையடுத்து, அந்தப் பகுதி விவசாயிகள், பொதுமக்கள், தங்களையும், இயற்கை வளங்களையும் பாதிக்கும் வகையில் உள்ள இந்தத் திட்டத்தை தவெக அரசு ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மூவன்சீவல்பட்டி பட்டச்சாமி கோயில் அருகே உள்ள வயல்வெளிகளில் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்த மேலூா் வட்டாட்சியா் வசந்த், காவல் துணைக் கண்காணிப்பாளா் சிவக்குமாா் ஆகியோா் விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, இந்த விவகாரம் தொடா்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும் எனவும், இதன்பிறகு, திட்டத்தை செயல்படுத்துவது தொடா்பாக முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனா். இதையடுத்து, விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments