FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

"அரசு துறையிலுள்ள இளைஞர்கள் நேர்மையான அதிகாரிகளாக செயல்பட வேண்டும்'

அரசு துறையிலுள்ள இளைஞர்கள் நேர்மையான அதிகாரிகளாக செயல்பட்டால், இந்தியாவை மேலும் சிறந்த நாடாக மாற்ற முடியும்

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

அரசு துறையிலுள்ள இளைஞர்கள் நேர்மையான அதிகாரிகளாக செயல்பட்டால், இந்தியாவை மேலும் சிறந்த நாடாக மாற்ற முடியும் என, குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் உதவியாளர் வி. பொன்ராஜ் வியாழக்கிழமை தெரிவித்தார்.
      சுரேஷ் அகாதெமி ராமநாதபுரம் கிளை நிறுவனத்தின் 2 ஆவது ஆண்டு விழா, அதன் நிறுவனர் வி. சுகேஷ் சாமுவேல் தலைமையில் நடைபெற்றது. விழாவில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் கெட்ஸி லீமா அமாலினி, தூத்துக்குடி தங்கம்மாள்புரம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தி. கணேசன், ஆர்.எஸ்.மங்கலம் வருவாய் ஆய்வாளர் கோபிநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
     விழாவில் குத்துவிளக்கேற்றி வி. பொன்ராஜ் பேசியதாவது: நிலவில் தண்ணீர் இருப்பதை முதலில் கண்டு அறிவித்த நாடு இந்தியா. செவ்வாய்க் கிரகத்துக்கு ராக்கெட் அனுப்பிய நாடுகளில் 3 ஆவது நாடு இந்தியா. மற்ற நாடுகள் ஒரே ராக்கெட்டில் 37 செயற்கை கோள்கள் வரை மட்டுமே அனுப்பியுள்ளன. ஆனால், இந்தியா மட்டுமே ஒரே ராக்கெட்டில் 104 செயற்கை கோள்களை அனுப்பி சாதனை படைத்த பெருமைக்குரியது.
    பொக்ரான் பாலைவனத்தில் கடந்த 1998 இல் அணுகுண்டு சோதனை நடத்தி, அத்தனை நாடுகளையும் பிரமிக்க வைத்தவர் அப்துல்கலாம். அவரது கண்டுபிடிப்பே கடலிலும், தரையிலும் செல்லும் ஹோவர் கிராப்ட் கப்பல். இதேபோன்று, அவர் எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்திக் காட்டினார். 
    இளைஞர்கள் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட வேண்டும். அரசு வேலை பெறும் இளைஞர்கள் நேர்மையான அதிகாரிகளாக செயல்பட்டால், இந்தியாவை  மேலும் ஒரு மிகச்சிறந்த நாடாக ஆக்கிவிட முடியும் என்றார்.
   விழாவில், க்யூ பிரிவு தலைமைக் காவலர் டி.ஆர்.எஸ். சுதாகர், கிராம நிர்வாக அலுவலர் தெட்சிணாமூர்த்தி, தூத்துக்குடி கூட்டுறவுத் துறை சார்-பதிவாளர் வி. அந்தோணி பட்டுராஜ் உள்பட பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் பேசினர். 
   முன்னதாக, சுரேஷ் அகாதெமி ராமநாதபுரம் கிளையின் ஒருங்கிணைப்பாளர் எம். ராஜேஷ்குமார் வரவேற்றார். இந்நிறுவனத்தின் நெல்லை கிளை ஒருங்கிணைப்பாளர் எம். அருண்சங்கர்  நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments