ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநர் சாவு
ராமேசுவரத்தில் புதன்கிழமை ஆட்டோ கவிழ்ந்ததில் அதன் ஓட்டுநர் உயிரிழந்தார்.
ராமேசுவரத்தில் புதன்கிழமை ஆட்டோ கவிழ்ந்ததில் அதன் ஓட்டுநர் உயிரிழந்தார்.
ராமேசுவரம் சல்லிமலை தெருவைச் சேர்ந்த வீரபத்திரன் மகன் வீரராகவன்(30). ஆட்டோ ஓட்டுநரான இவரும் இவரது நன்பர் சூரியா (25) என்பவரும் ஆட்டோவில் பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளனர். பேருந்து நிலையம் அருகே செல்லும்போது ஆட்டோ நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துள்ளானது. இதில் வீரராகவன் தலையில் அடிபட்டு பலத்த காயம் அடைந்தார். ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். உடன் சென்ற நண்பர் சிறிய காயத்துடன் தாப்பினர். இச்சம்பவம் தொடர்பாக நகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.