பரளையாற்றில் இரவு, பகலாக மணல் திருட்டு: கண்டுகொள்ளாத அதிகாரிகள்
கமுதி அருகே பரளையாற்றில் இரவு பகலாக மணல் திருட்டு நடைபெறுவதை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கமுதி அருகே பரளையாற்றில் இரவு பகலாக மணல் திருட்டு நடைபெறுவதை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மதுரை வைகை ஆற்றில் இருந்து பார்த்திபனூர் மதகணையிலிருந்து பிரிந்து பார்த்திபனூர், அபிராமம் வழியாக பாயும் பரளையாறு, முதுகுளத்தூர் பகுதியில் உள்ள 100-க்கு மேற்பட்ட கிராமங்களுக்கு பாசனத்திற்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.
இந்நிலையில் பரளையாற்றில் சிலர் இரவு நேரங்களில் தொடர்ந்து மணல் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதை தடுக்க வேண்டிய காவல், வருவாய்த்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாமால் உள்ளதாக அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனால் பரளையற்றை நீராதாரமாக கொண்டுள்ள ஆர்.சோடனேந்தல், மேலகன்னிசேரி, உடையநாதபுரம், மணலூர், நடையனேந்தல், ஆணையூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் குடிநீர் ஆதாரம் இன்றி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து, விளைநிலங்கள், விவசாய பணிகள் பாதித்துள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு அபிராமம் பரளையாற்றில் நடக்கும் மணல் திருட்டை தடுத்து விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.