ரூ.50 ஆயிரத்தை எடுத்து ஓட முயன்ற இளைஞர் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு
ராமேசுவரம் தபால் நிலையம் அருகே இரு சக்கர வாகனப் பெட்டியிலிருந்து ரூ.50 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு
ராமேசுவரம் தபால் நிலையம் அருகே இரு சக்கர வாகனப் பெட்டியிலிருந்து ரூ.50 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு ஓட முயன்ற இளைஞரை, வியாழக்கிழமை பொதுமக்கள் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
ராமேசுவரம் வெண்மணி நகரைச் சேர்ந்த டேவிட்சன் என்பவர், தலைமை தபால் நிலையத்துக்கு வந்துள்ளார். அப்போது, தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி பெட்டியில் இருந்த பொருளை எடுத்துக்கொண்டு அலுவலகத்துக்குள் சென்றுள்ளார். பெட்டியை மூடாமல் சென்றதைக் கண்ட இளைஞர், அதற்குள் இருந்த ரூ.50 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு ஓடியுள்ளார். இதைக் கண்ட பொதுமக்கள் அவரை விரட்டிப் பிடித்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அதையடுத்து, டேவிட்சன் அளித்த புகாரின்பேரில், போலீஸார் இரட்டை பிள்ளையார் கோயில் பகுதியைச் சேர்ந்த பரமசிவம் மகன் மணிகண்டன்(36) என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.