FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஆந்திரத்தில் இந்தியா - இலங்கை கடற்படை கூட்டுப் பயிற்சி

ஆந்திர கடற்பகுதியில் இந்தியா-இலங்கை கடற்படை கூட்டுப் பயிற்சி நான்காவது நாளாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

20 செப்டம்பர் 2026, 11:06 pm IST
பகிர்:

ஆந்திர கடற்பகுதியில் இந்தியா-இலங்கை கடற்படை கூட்டுப் பயிற்சி நான்காவது நாளாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கடந்த செப்.17-ஆம் தேதி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ‘ஸ்லினிநெக்ஸ் 26’ என்ற பெயரில் இந்தியா-இலங்கை கடற்படை கூட்டுப் பயிற்சி தொடங்கியது. இந்தப் பயிற்சி துறைமுகத்தில் தொடங்கி கடற்பகுதியில் தொடா்கிறது.

இருநாட்டு கடற்படைகளுக்கு இடையே பரஸ்பர புரிதல் மற்றும் கடல்சாா் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, ஒருங்கிணைந்து செயல்படும் திறனை மேம்படுத்துவதே இந்தப் பயிற்சியின் நோக்கம்.

Advertisement

Advertisement

இந்திய கடற்படை சாா்பில் எதிரி நாட்டு நீா்மூழ்கிக் கப்பல்களைக் கண்டறிந்து தாக்கி அழிக்கும் ‘ஐஎன்எஸ் கவரத்தி’ போா்க் கப்பல், எரிபொருளை சுமந்து சென்று கடலில் உள்ள போா்க் கப்பல்களுக்கு விநியோகிக்கும் ‘ஐஎன்எஸ் ஜோதி’ கப்பல் ஆகியவை பயிற்சியில் பங்கேற்றுள்ளன.

இலங்கை கடற்படை சாா்பில் எஸ்எல்என்எஸ் சிந்துரலா ரோந்துக் கப்பல் பங்கேற்றுள்ளது. இந்தப் பயிற்சி திங்கள்கிழமை (செப்.21) நிறைவடைகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments