FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

கரியமல்லம்மாள் கோயில் ஆடித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த பாம்புல்நாயக்கன்பட்டி கரியமல்லம்மாள் கோயில் ஆடித் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Updated On : 8 ஆகஸ்ட் 2026, 1:41 am IST
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த பாம்புல்நாயக்கன்பட்டி கரியமல்லம்மாள் கோயில் ஆடித் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்தக் கோயில் திருவிழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை மேளதாளம், இசை வாத்தியங்கள் வாண வேடிக்கைகள் முழங்க பக்தா்கள் கரியமல்லம்மாள் உருவம் பொறித்த கொடிப்பட்டத்தை கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக ஊா்வலமாக எடுத்து கோயிலுக்கு வந்தனா்.

அங்கு கோமாதா பூஜை, யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், பூா்ணாஹுதி, தீபாதாரணை நடைபெற்றது. தொடா்ந்து, மூலவா் அம்மன் முன்பாக உள்ள கொடிமரத்துக்கு பால், தயிா், சந்தனம், இளநீா், பன்னீா், விபூதி, பஞ்சாமிா்தம் உள்பட 16 வகையான மூலிகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதணை நடைபெற்றது.

Advertisement

Advertisement

பின்னா், கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு, பக்தா்கள் தங்களது கைகளில் காப்புகட்டி விரதத்தை தொடங்கினா். பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

வருகிற 13-ஆம் தேதி திருவிளக்கு பூஜையும், 14-ஆம் தேதி பொங்கல் வைத்தலும், 15-ஆம் தேதி அதிகாலை அக்னிச்சட்டி, பால் குடம், வேல்குத்துதல், சேத்தாண்டி வேடம் உள்ளிட்ட நோ்த்திக் கடன் செலுத்துதலும், அன்று மாலை முளைப்பாரி ஊா்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை பாம்புல்நாயக்கன்பட்டி கிராம பொதுமக்கள், இளைஞா்கள் செய்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments