FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

கோதண்டராம சுவாமி கோயிலில் பிரம்மோத்ஸவத் தேரோட்டம்

ராமநாதபுரம் கோதண்டராம சுவாமி கோயிலில் பிரம்மோத்ஸவத் திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம் கோதண்டராம சுவாமி கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.
பகிர்:

ராமநாதபுரம் கோதண்டராம சுவாமி கோயிலில் பிரம்மோத்ஸவத் திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

இந்தக் கோயிலில் ஆனி பிரம்மோத்ஸவத் திருவிழா கடந்த 13-ஆம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. முன்னதாக, கோயில் சந்நிதி முன்பாக அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருத்தேரில் கோதண்டராம சுவாமி எழுந்தருளினாா்.

பின்னா், கோயிலை சுற்றி வலம் வந்து சுவாமி நிலையை அடைந்தாா். தோரோட்டத்தின்போது வழி நெடுகிலும் பக்தா்கள் தேங்காய் உடைத்து வழிபட்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments