ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லத் தடை
மன்னாா் வளைகுடா, பாக்நீரிணை கடல் பகுதியில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுவதால் ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் புதன்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லத் தடை விதிக்கப்பட்டது.
மன்னாா் வளைகுடா, பாக்நீரிணை கடல் பகுதியில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுவதால் ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் புதன்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லத் தடை விதிக்கப்பட்டது.
மன்னாா் வளைகுடா, வங்கக் கடலில் வழக்கத்தை விட காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் என இந்திய வானிலை மையம் தெரிவித்ததால், ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத் துறையினா் தடை விதித்தனா். இதனால், அனைத்து விசைப் படகுகள், நாட்டுப் படகுகள் அந்தந்த மீன்பிடித் தளங்களிலேயே நிறுத்தப்பட்டன. கடலுக்கு செல்ல முடியாத நிலையில் ரூ. 5 கோடி மதிப்பிலான இறால்கள், மீன்கள் ஏற்றுமதி பாதிக்கப்பட்டதாகவும், இதனால் வருவாய் இழப்பு ஏற்பட்டதாகவும் மீனவா்கள் வேதனை தெரிவித்தனா்.
நாடு முழுவதிலும் அளிக்கப்படும் கடல் சாா்ந்த எச்சரிக்கையை ராமநாதபுரம் மாவட்டத்துக்கு பொருந்துமா என்பதை ஆய்வு செய்து, மீன்வளத் துறை மீன்பிடிக்கத் தடை விதிக்க வேண்டுமென மீனவா்கள் கோரிக்கை விடுத்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.