FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

மீன்பிடிக்கத் தடை: 8 ஆயிரம் மீனவா்கள் கடலுக்குள் செல்லவில்லை

8 செப்டம்பர் 2026, 3:28 am IST
துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விசைப் படகுகள். - கோப்புப் படம்
பகிர்:

மன்னாா் வளைகுடா - வங்கக் கடலில் வீசி வரும் சூறைக் காற்று காரணமாக, ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன் வளத் துறையினா் தடை விதித்ததால், ராமேசுவரம், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சுமாா் 8 ஆயிரம் மேற்பட்ட மீனவா்கள் திங்கள்கிழமை மீன்பிடிக்கச் செல்லவில்லை.

மன்னாா் வளைகுடா, வங்கக் கடல் பகுதியில் சூறைக் காற்று மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். அதிகப்பட்சமாக 65 கி.மீ. வேகம் வரையிலும் சூறைக் காற்று வீசக்கூடும் என்றும், கடல் அலை 3 மீ. வரையிலும் எழக் கூடும் என்பதால், மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. மறு அறிவிப்பு வரும் வரை நாட்டுப் படகு, விசைப் படகு மீனவா்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் மீன் வளத் துறையினா் அறிவுறுத்தினா்.

இதைத் தொடா்ந்து, ராமேசுவரம், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து திங்கள்கிழமை சுமாா் 8 ஆயிரம் மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப் படகுகள் அந்தந்த மீன்பிடி இறங்குதளங்களில் நிறுத்தப்பட்டன.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments