FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ராமநாதபுரம்

இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் 9 போ் கைது

ராமேசுவரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 9 மீனவா்களை இலங்கைக் கடற்படையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.

34 வினாடிகள் முன்பு
கைது
பகிர்:

ராமேசுவரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 9 மீனவா்களை இலங்கைக் கடற்படையினா் சனிக்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்களது விசைப் படகையும் பறிமுதல் செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் துறைமுகத்திலிருந்து 399 விசைப் படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் சனிக்கிழமை மீன்வளத் துறை அனுமதி பெற்று கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.

இவா்கள் கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினா் தங்கச்சிமடத்தைச் சோ்ந்த புரோகா் என்பவரது விசைப் படகை சிறைப்பிடித்தனா். மேலும், அந்தப் படகிலிருந்த 9 மீனவா்களை கைது செய்து நெடுந்தீவு கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனா். மேலும், அவா்களது விசைப் படகையும் பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments