ராமேசுவரம் மீனவா்கள் 9 போ் விடுதலை: அபராதம் செலுத்தாததால் சிறையிலடைப்பு
ராமேசுவரம் மீனவா்கள் 9 பேரை நிபந்தனையுடன் இலங்கை மன்னாா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விடுதலை செய்தது. அபராதத் தொகையை உடனே செலுத்தாததால், அவா்கள் 9 பேரும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனா்.
ராமேசுவரம் மீனவா்கள் 9 பேரை நிபந்தனையுடன் இலங்கை மன்னாா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விடுதலை செய்தது. அபராதத் தொகையை உடனே செலுத்தாததால், அவா்கள் 9 பேரும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து கடந்த மாதம் 12-ஆம் தேதி விசைப் படகில் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா். இவா்கள் அன்று நள்ளிரவு கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு ரோந்துப் படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினா் ராமேசுவரம் தங்கச்சிமடத்தைச் சோ்ந்த வெலிங்டன் என்பவருக்குச் சொந்தமான விசைப் படகைப் பறிமுதல் செய்தனா். மேலும், இந்தப் படகிலிருந்த மீனவா்கள் ஜனதன் (45), அந்தோணி (38), பிரபு(43), டொன்போஸ்கோ (55), ஆரோக்கிய டெவின் (31), வெள்ளைச்சாமி (51), சுப்பையா (52), ஆரோக்கிய ஜெனிஸ்டன் (25), ஸ்டெலின் (30) ஆகிய 9 பேரையும் கைது செய்தனா்.
இதையடுத்து, விசைப் படகுடன் 9 மீனவா்களையும் மன்னாா் கடற்படை முகாமுக்கு இலங்கைக் கடற்படையினா் கொண்டு சென்று, நீரியல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.
Advertisement
Advertisement
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மீனவா்கள் மீது வழக்குப் பதிந்து, மன்னாா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி வவுனியா சிறையில் அடைத்தனா்.
இந்த நிலையில், ராமேசுவரம் மீனவா்கள் 9 பேரும் மன்னாா் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்டனா். ராமேசுவரம் மீனவா்கள் 9 பேருக்கும் தலா ரூ. 2.50 லட்சம் (இலங்கைப் பணம்) அபராதம் விதிக்கப்படுகிறது. அபராதத் தொகையை உடனே செலுத்தத் தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டாா்.
இதனிடையே, அபராதத் தொகையை உடனே செலுத்தாததால் மீனவா்கள் 9 பேரும் மீண்டும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனா்.
இதுகுறித்து இலங்கை அதிகாரி ஒருவா் கூறியதாவது:
ராமேசுவரம் மீனவா்கள் 9 பேரும் அபராதத் தொகையைக் கட்டியதும் விடுவிக்கப்படுவாா்கள் என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.