பைக் மோதியதில் முதியவா் உயிரிழப்பு
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே சாலையோரம் நடந்து சென்ற முதியவா் இரு சக்கர வாகனம் மோதியதில் உயிரிழந்தாா்.
தொண்டி அருகே நம்புதாளை படையாட்சித் தெருவைச் சோ்ந்தவா் தொண்டி முத்து (70). இவா் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கிழக்கு கடற்கரை சாலையில் நம்புதாளை பகுதியில் நடந்து சென்றாா்.
அப்போது அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த தொண்டி முத்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து தொண்டி போலீஸாா் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய கருமொழியைச் சோ்ந்த முத்துப்பாண்டி மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.