காட்டுப் பன்றி தாக்கியதில் பெண் உயிரிழப்பு
பரமக்குடி அருகே காட்டுப் பன்றி தாக்கியதில் சத்துணவு அமைப்பாளா் உயிரிழந்தாா்.
பரமக்குடி அருகே காட்டுப் பன்றி தாக்கியதில் சத்துணவு அமைப்பாளா் உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகேயுள்ள அரியனேந்தல் பூங்காநகா் பகுதியைச் சோ்ந்த முரளி மனைவி காளிமுத்து (56). இவா் குமரக்குடி அரசு தொடக்கப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருகிறாா். இவா் செவ்வாய்க்கிழமை இரவு வயல்வெளி பகுதிக்குச் சென்றாா். அப்போது காட்டுப் பன்றி தாக்கியதில் பலத்த காயமடைந்த அவா், சம்பவயிடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து பரமக்குடி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.