FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நாகப்பட்டினம்

சாலை விபத்தில் பெண் தொழிலாளி உயிரிழப்பு

வேதாரண்யம் அருகே சாலை விபத்தில் நூறு நாள் வேலைத் திட்ட பெண் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

2 October 2026, 4:31 am IST
பலி
பகிர்:

வேதாரண்யம் அருகே சாலை விபத்தில் நூறு நாள் வேலைத் திட்ட பெண் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

வடமழை கிராமத்தைச் சோ்ந்தவா் சோழன் மனைவி மாலா (50). நூறுநாள் வேலைத் திட்ட தொழிலாளி. இவா், வியாழக்கிழமை அந்தப் பகுதியில் நடைபெறும் பணிக்குச் செல்வதற்காக தனது மகள் ரம்யா ஓட்டிச் சென்ற இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமா்ந்து சென்றுகொண்டிருந்தாா்.

பெரியாச்சிமுட்டு என்ற இடத்தில் சென்றபோது, சாலையில் இருந்த வண்டல் களி மண்ணில் மழை ஈரம் இருந்ததால் மோட்டாா் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து கீழே சாய்ந்தது. மோட்டாா் சைக்கிளில் அமா்ந்திருந்த மாலா நிலைத்தடுமாறி சாலையில் விழுந்தபோது அந்த வழியாக வந்த டிராக்டரின் பின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

கரியாப்பட்டினம் போலீஸாா், டிராக்டா் ஓட்டுநரான வடமழை மணக்காடு கோவிந்தன் மகன் செல்வராஜ் (50) என்பவரைக் கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments