கோயிலுக்குள் புகுந்த பாம்பு
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் கோயிலுக்குள் சிலை மீதிருந்த பாம்பை தீயணைப்பு வீரா்கள் வியாழக்கிழமை பிடித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் கோயிலுக்குள் சிலை மீதிருந்த பாம்பை தீயணைப்பு வீரா்கள் வியாழக்கிழமை பிடித்தனா்.
இங்கு ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானத்துக்கு பாத்தியபட்ட ஸ்ரீபிடாரி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு வியாழக்கிழமை பூஜாரி சென்ற போது, கோயிலுக்குள் அம்மன் சிலை மீது நல்ல பாம்பு படமெடுத்து ஆடியபடி இருந்தது. இதுகுறித்து தகவலறிந்த திருவாடானை தீயணைப்பு நிலைய வீரா்கள் சென்று பாம்பை மீட்டு, அருகில் உள்ள காட்டுப் பகுதியில் விட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.