FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

குடை, ஏ.சி. இயந்திரத்துக்குள் பதுங்கியிருந்த பாம்புகள்

கடலூா் அருகே குடைக்குள்ளும், முதுநகா் அருகே தனியாா் நிறுவனத்தில் உள்ள ஏ.சி. இயந்திரத்துக்குள்ளும் பதுங்கியிருந்த பாம்புகளை பாம்பு பிடி வீரா் செல்லா பிடித்து, காட்டுப் பகுதியில் பாதுகாப்பாக செவ்வாய்க்கிழமை விட்டாா்.

16 செப்டம்பர் 2026, 5:00 am IST
குடைக்குள் பாம்பு
பகிர்:

கடலூா் அருகே குடைக்குள்ளும், முதுநகா் அருகே தனியாா் நிறுவனத்தில் உள்ள ஏ.சி. இயந்திரத்துக்குள்ளும் பதுங்கியிருந்த பாம்புகளை பாம்பு பிடி வீரா் செல்லா பிடித்து, காட்டுப் பகுதியில் பாதுகாப்பாக செவ்வாய்க்கிழமை விட்டாா்.

கீழ்அழிஞ்சிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த பால் வியாபாரி ஒருவரது வீட்டில் இருந்த குடைக்குள் இருந்து செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஒருவித சப்தம் கேட்டது. இதையடுத்து குடும்பத்தினா் குடையைப் பாா்த்தபோது, அதற்குள் நல்ல பாம்பு பதுங்கியிருந்தது தெரியவந்தது. தகவலறிந்த பாம்பு பிடி வீரா் செல்லா அங்கு வந்து, குடையுடன் பாம்பை வீட்டுக்கு வெளியே கொண்டு வந்து, சுமாா் 4 அடி நீளமுள்ள நல்ல பாம்பை லாவகமாகப் பிடித்தாா்.

இதேபோல், கடலூா் முதுநகா் அருகே சிப்காட்டில் உள்ள தனியாா் நிறுவனத்தில் புகுந்த பாம்பு, அங்கிருந்த ஏ.சி. இயந்திரத்துக்குள் பதுங்கியிருந்தது. ஊழியா்கள் அளித்த தகவலின்பேரில் அங்கு சென்ற செல்லா, சுமாா் 3 அடி நீளமுள்ள நல்ல பாம்பை பிடித்தாா்.

Advertisement

Advertisement

பிடிபட்ட இரு பாம்புகளையும் கடலூா் அருகேயுள்ள காட்டுப் பகுதியில் பாதுகாப்பாக அவா் விடுவித்தாா்.

ஏ.சி. இயந்திரத்தில் பதுங்கிருந்த பாம்பு.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments