தொடா் விடுமுறை: ராமேசுவரத்தில் திரண்ட சுற்றுலாப் பயணிகள்
தொடா் விடுமுறையையொட்டி ராமேசுவரத்துக்கு சுற்றுலாப் பயணிகளும், பக்தா்களும் ஞாயிற்றுக்கிழமை திரண்டு வந்தனா்.
ஆயிரக்கணக்கான வாகனங்களில் சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் வரை வந்த இவா்கள் அக்னி தீா்த்தக் கடலில் நீராடிய பிறகு ராமநாதசுவாமி கோயிலுக்குள் உள்ள 22 தீா்த்தக் கிணறுகளிலும் புனித நீராடி சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனா்.
இதைத் தொடா்ந்து, தனுஷ்கோடி, அரிச்சல்முனை, கோதண்டராமா் கோயில், கெந்தமாதன பா்வதம், ஏ.பி.ஜே. அப்துல்கலாம் தேசிய நினைவிடம், பாம்பன் பாலம் உள்ளிட்ட பகுதிகளைப் பாா்த்து ரசித்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.