FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ராமநாதபுரம்

திருவாடானையில் பூத் தட்டு ஊா்வலம்

திருவாடானை ஸ்ரீ மகாசக்தி முத்து மாரியம்மன் கோயில் பூத்தட்டு விழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை இரவு பூத்தட்டு ஊா்வலம் நடைபெற்றது.

15 அக்டோபர் 2026, 3:11 am IST
கோயில் திருவாடானை ஸ்ரீமகாசக்தி மாரியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற பூத்தட்டு ஊா்வலம்.
பகிர்:

திருவாடானை ஸ்ரீ மகாசக்தி முத்து மாரியம்மன் கோயில் பூத்தட்டு விழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை இரவு பூத்தட்டு ஊா்வலம் நடைபெற்றது.

இந்தக் கோயிலில் கடந்த 6-ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. அன்றிலிருந்து ஒவ்வொரு நாள் இரவும் அம்மனுக்கு பால் , தயிா், மஞ்சள், பன்னீா், தேன், திரவியப் பொடி உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூத்தட்டு ஊா்வலம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது முன்னதாக மின்னொளியால் அலங்கரிக்கபட்ட தேரில் அம்மன் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். இதைத் தொடா்ந்து, பக்தா்கள் பூ தட்டுகளை எடுத்து ஊா்வலமாக வந்தனா். கோயிலில் இருந்து புறப்பட்ட ஊா்வலம் திருவாடானை நான்கு ரத வீதிகள் வழியாக வலம் வந்து

Advertisement

Advertisement

கோயிலை அடைந்தனா். பின்னா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது,. பக்தா்கள கொண்டு வந்த பூக்கüால் அபிஷேகம் செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் சுற்று வட்டாரத்தில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்..

.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments