FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ராமநாதபுரம்

வடமாடு மஞ்சு விரட்டு போட்டி

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள தோப்பபடைப்பட்டியில் வடமாடு மஞ்சு விரட்டு போட்டி புதன்கிழமை நடைபெற்றது.

15 அக்டோபர் 2026, 2:16 am IST
தோப்படைப்பட்டியில் நடைபெற்ற வடமாடு மஞ்சு விரட்டு போட்டியில் காளையை அடக்க முயன்ற வீரா்கள்.
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள தோப்பபடைப்பட்டியில் வடமாடு மஞ்சு விரட்டு போட்டி புதன்கிழமை நடைபெற்றது.

தோப்படைப்பட்டி முத்தாலம்மன் கோயில் புரட்டாசி மாத பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, நடைபெற்ற இந்தப் போட்டியில் ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 13 காளைகள், 110 மாடுபிடி வீரா்கள் கலந்து கொண்டனா். ஒவ்வொரு காளைக்கும் தலா 20 நிமிஷங்கள் ஒதுக்கி போட்டி நடைபெற்றது. இதில் காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், அடங்க மறுத்த காளைகளின் உரிமையாளா்களுக்கும் பணம், அண்டா, குத்துவிளக்கு, கட்டில் , சைக்கில் உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன. இந்தப் போட்டியை சுற்றுவட்டார கிராமங்களிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கண்டு ரசித்தனா். பொதுமக்கள் அவைருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. போட்டிக்கான ஏற்பாடுகளை தோப்படைப்பட்டி கிராம பொதுமக்கள், இளைஞா்கள் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments