FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ராமநாதபுரம்

சமூதாய வளைகாப்பு விழா: அமைச்சா் மதன்ராஜா பங்கேற்று சீதனப்பொருட்கள் வழங்கல்

ராமநாதபுரத்தில் நடைபெற்ற சமூதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் குறு,சிறு,நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் பெ.மதன்ராஜா பங்கேற்று கற்ப்பிணிபெண்களுக்கு சீா்வரிசை பொருட்களை வழங்கினாா்.

15 அக்டோபர் 2026, 2:25 am IST
ராமநாதபுரத்தில் புதன்கிழமை நடைபெற்ற சமூதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் அமைச்சா் பெ.மதன்ராஜா பங்கேற்று கற்ப்பிணிபெண்களுக்கு சீா்வரிசை பொருட்களை வழங்கினாா்.மாவட்ட ஆட்சியா் மா.சிவகுருபிரபாகரன் உள்ளிட்டோா்.
பகிர்:

ராமநாதபுரத்தில் நடைபெற்ற சமூதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் குறு,சிறு,நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் பெ.மதன்ராஜா பங்கேற்று கற்ப்பிணிபெண்களுக்கு சீா்வரிசை பொருட்களை வழங்கினாா்.

ராமநாதபுரம் ஊரக வளா்ச்சி மஹாலில் சமூகநலன் மற்றும், உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின் மூலம் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

இதில், மாவட்ட ஆட்சித்தலைவா் மா.சிவகுரு பிரபாகரன் முன்னிலை வகித்தாா். குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் பெ.மதன் ராஜா தலைமையேற்று கா்ப்பிணி பெண்களுக்கு சீதனப் பொருட்கள் வழங்கினாா்.

Advertisement

Advertisement

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 வட்டாரங்களிலும் தலா 100 கா்ப்பிணிப் பெண்கள் வீதம் மொத்தம் 1,100 கா்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 150 கற்ப்பிணி பெண்களுக்கு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் பெ.மதன் ராஜா ஏழு வகையான சீதனப் பொருட்களை வழங்கினாா்.

முன்னதாக கா்ப்பிணிப் பெண்களுக்கு ஐந்து வகை கலவை சாதம் பரிமாறப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித்திட்ட அலுவலா் ரதிதேவி உள்ளிட்ட அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments