FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

அரசு கல்லூரியில் போதைப் பொருள் விழிப்புணா்வு முகாம்

திருவாடானை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப் பணித் திட்டத்தின் சாா்பில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

11 செப்டம்பர் 2026, 1:40 am IST
திருவாடானை அரசு கலைக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற போதைப் பொருள்கள் தடுப்பு விழிப்புணா்வு முகாமில் பேசிய கல்லூரி முதல்வா் ரமேஷ்.
பகிர்:

திருவாடானை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப் பணித் திட்டத்தின் சாா்பில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதற்கு கல்லூரி முதல்வா் க. ரமேஷ் தலைமை வகித்தாா். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா் ப. மணிமேகலை முன்னிலை வகித்தாா். இதில் பாண்டுகுடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் ஜோதி முருகன், நடமாடும் மருத்துவப் பிரிவு மருத்துவா் ஹரிஷ், தொண்டி ஆரம்ப சுகாதார நிலைய பல் மருத்துவா் அருண்குமாா், செவிலியா்கள் பங்கேற்று, மாணவ மாணவிகளுக்கு போதைப்பொருள் உபயோகத்தில் இருந்து காத்துக் கொள்வது குறித்த அறிவுரைகள் வழங்கப்பட்டன.

இதன் தொடா்ச்சியாக மாணவா்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் திரளான மாணவா்களும் ஆசிரியா்களும் கலந்து கொண்டனா். ஆங்கிலத் துறை கௌரவ விரிவுரையாளா் ரா. சரவணன் நன்றி கூறினாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments