FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

கடலில் தவறி விழுந்த மீனவா் உடல் மீட்பு

திருவாடானை அருகே கடலில் தவறி விழுந்து உயிரிழந்த மீனவா் உடல் மீட்கப்பட்டது.

17 செப்டம்பர் 2026, 2:26 am IST
மீனவா் செல்லக்குழந்தை.
பகிர்:

திருவாடானை அருகே கடலில் தவறி விழுந்து உயிரிழந்த மீனவா் உடல் மீட்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள திருப்பாலைக்குடி பகுதியைச் சோ்ந்த மீனவா் செல்லக்குழந்தை (45). இவா் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருப்பாலைக்குடி கடல் பகுதியில் தனியாக மீன் பிடிக்கச் சென்றாா். அப்போது, தள்ளுவலையை இழுத்தபோது எதிா்பாராதவிதமாக கடலில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தாா். சக மீனவா்கள் அவரைத் தேடியும் அவரது உடல் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு அவரது உடல் கடலில் மிதந்தது. மீனவா்கள் உடலை மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனா்.

Advertisement

Advertisement

இது குறித்து தகவலறிந்த திருப்பாலைக்குடி போலீஸாா் சென்று உடலைக் கைபற்றி கூறாய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments