FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

பரமக்குடியில் இந்திய கம்யூ. கட்சியின் மாவட்டக் குழு கூட்டம்

பரமக்குடி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

16 செப்டம்பர் 2026, 5:37 am IST
பகிர்:

பரமக்குடி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, திருவாடனை வட்டச் செயலா் ஜெயராமன் தலைமை வகித்தாா். இதில், முன்னாள் மக்களவை உறுப்பினா் போ. லிங்கம் கலந்துகொண்டு இன்றைய அரசியல் சூழல் குறித்து மாநிலக் குழுவின் முடிவுகளை விளக்கிக் கூறினாா். மாவட்டச் செயலா் என்.எஸ். பெருமாள், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா்கள் என்.கே. ராஜன், எஸ்.பி. ராதா ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

கூட்டத்தில், அக். 15-இல் நடைபெறும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் பேரணி, பொதுக் கூட்டத்தில் திரளாகப் பங்கேற்பது, நகராட்சிப் பகுதிகளில் இரவு நேரங்களில் தெரு விளக்குகள் ஏரியாமல் உள்ளதை சீரமைக்கக் கோருவது என்பது உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து பல்வேறு நிா்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments